Tuesday, October 3, 2023
Homeதொழில்நுட்பம்3 மாதத்தில் 10000 கோடி.. இந்திய தொழிலதிபர்களை வியக்கவைத்த இளைஞன்..!

3 மாதத்தில் 10000 கோடி.. இந்திய தொழிலதிபர்களை வியக்கவைத்த இளைஞன்..!

இந்திய இளைஞர்கள், புதிய டெக்னாலஜி, ஸ்டார்ட்அப் நிறுவனம் இதுதான் இன்றைய சக்சஸ் பார்மூலா-வாக உள்ளது. இந்திய இளைஞர்கள் புதிய டெக்னாலஜியை எளிதில் கையாளும் திறன் கொண்டு இருக்கும் காரணத்தாலும், மக்களுக்கும் சந்தைக்கும் ஏற்ற வகையில் திறன்வாய்ந்த திட்டத்தை உருவாக்கும் வேகம் அவர்களிடம் இருக்கும் காரணத்தால் குறுகிய காலத்தில் பெரும் வெற்றியை அடைகின்றனர்.

இப்படிப்பட்ட வெற்றியை தான் பெர்ல் கபூர் என்பவர் அடைந்துள்ளார், வெறும் 3 மாத காலத்தில் இவர் 10000 கோடி ரூபாய் மதிப்பிலான நிறுவனத்திற்கு சொந்தக்காரராகியுள்ளார். இது எப்படி சாத்தியமானது..? குறிப்பாக டெக் துறை மிகவும் மோசமாக இருக்கும் இந்த காலத்தில் எப்படி நடந்தது என்பது தான் இந்திய தொழிலதிபர்களை வியக்க வைத்த ஒரு விஷயம்.

நீங்கள் ஐடி ஊழியராகவோ, அல்லது வெப் டெவலப்பர் ஆகவோ இருந்தால் கட்டாயம் சைபர் 365 நிறுவனம் தெரிந்திருக்கும். இணைய பாதுகாப்பு அதாவது சைபர் செக்யூரிட்டி பிரிவில் கடந்த சில மாதங்களாக பிரபலமாக இருக்கும் ஒரு ஸ்டார்ட்அப் நிறுவனம் தான் இந்த சைபர் 365

பெர்ல் கபூர் தலைமையில் உருவான சைபர் 365 ஸ்டார்ட்அப் நிறுவனத்தில் இவர் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக உள்ளார். 365 ஸ்டார்ட்அப் நிறுவனம் மே 2023ல் தான் துவங்கப்பட்டது, துவங்கி மூன்றே மாதங்களில் யூனிகார்ன் நிறுவனமாக உயர்ந்தது தான் இந்நிறுவனத்தின் ஸ்பெஷாலிட்டி. யூனிகார்ன் நிறுவனம் என்பது 1 பில்லியன் டாலர் மதிப்பீடு கொண்ட ஒரு நிறுவனம். பெர்ல் கபூர் உருவாக்கிய சைபர் 365 ஸ்டார்ட்அப் நிறுவனம் சமீபத்தில் பிரிட்டன் நாட்டை தலைமையிடமாக கொண்ட SRAM & MRAM குழுமத்திடமிருந்து 1.2 பில்லியன் டாலர் மதிப்பீட்டில் சுமார் 100 மில்லியன் டாலர்களை முதலீடாக திரட்டியுள்ளது. இதன் மூலம் மே மாதம் துவங்கி ஜூலை மாதத்தில் 10000 கோடி ரூபாய் மதிப்பிலான ஒரு ஸ்டார்ட்அப் நிறுவனத்தை உருவாக்கியுள்ளார் பெர்ல் கபூர்.

Zyber 365 நிறுவனம் பெர்ல் கபூர் மற்றும் பிரபல Ethical Hacker ஆன சன்னி வகேலா ஆகியோர் இணைந்து உருவாக்கினர், தற்போது சன்னி வகேலா இந்நிறுவனத்தின் தலைமை ப்ராடெக்ட் அதிகாரியாக உள்ளார். பெர்ல் கபூர் இந்தியாவில் Web3 OS இன் உருவாக்கியவர் என்று பிரபலமாக அறியப்படுபவர், ஐடி மற்றும் Web3 பிரிவில் பணியாற்றுவோருக்கு கட்டாயம் இவரை தெரிந்திருக்கும். பெர்ல் கபூர் லண்டன் குயின் மேரி பல்கலைக்கழகத்தில் MSC இன்வெட்ஸ்ட் பேங்கிங் பிரிவில் பட்டம் பெற்றுள்ளார். இவர் Zyber 365 நிறுவனத்தை துவங்குவதற்கு முன்பு, AMPM ஸ்டோரில் நிதி ஆலோசகராக கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் பணியாற்றினார், ஆன்டியர் சொல்யூஷன்ஸ் நிறுவனத்தில் வணிக ஆலோசகராக 1.5 ஆண்டுகள் பணியாற்றினார். பிப்ரவரி 2022 இல் பில்லியன் பே டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தையும் நிறுவினார்.

Zyber 365 நிறுவனம் இந்தியாவில் செயல்பாட்டு தளத்தை கொண்டு லண்டன்-ஐ தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது. Zyber 365 நிறுவனம் decentralised மற்றும் cyber-secured ஆப்ரேட்டிங் தளத்தை வழங்குகிறது. Zyber 365 நிறுவனத்தின் வாயிலாக பெர்ல் கபூர் மற்றும் சன்னி வகேலா ஆகியோர் பிளாக்செயின், AI, சைபர் செக்யூரிட்டி போன்ற முக்கியமான தொழில்நுட்பத்தை இணைக்கும் முயற்சியில் ஈடுப்பட்டு உள்ளனர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular