Saturday, September 30, 2023
Homeஆரோக்கியம்சமையல் குறிப்புகள்2 முட்டை இருந்தா போதும் பிரட் ரோல் செய்யலாம்

2 முட்டை இருந்தா போதும் பிரட் ரோல் செய்யலாம்

வீட்டில் ஏதாவது செய்து சாப்பிட வேண்டும் என்று தோன்றுகிறது போல் இருந்தால் முட்டை மற்றும் பிரட் வைத்து இந்த மாதிரி நீங்கள் ரோல் செய்து சாப்பிடலாம். பத்து நிமிடத்தில் செய்து அசத்தக் கூடிய இந்த ரோல் அற்புதமான சுவையாக இருக்கும். வெளியே மொறு மொறுவென்று, உள்ளே முட்டையுடன் சாப்பிட நன்றாக இருக்கக் கூடிய இந்த பிரட் ரோல் செய்வதற்கு அதிக நேரமும் எடுக்கப் போவது கிடையாது. குறைந்த பொருட்களை வைத்து அருமையான முட்டை பிரட் ரோல் எப்படி தயாரிப்பது? என்பதைத் தான் இந்த சமையல் குறிப்பு பதிவின் மூலம் நாம் தொடர்ந்து தெரிந்து கொள்ள இருக்கிறோம், வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

முட்டை பிரெட் ரோல் செய்ய தேவையான பொருட்கள்:

பிரட் துண்டுகள் – 4

*முட்டை – இரண்டு

*மிளகுத்தூள் – கால் டீஸ்பூன்

*மிளகாய்த்தூள் – நான்கு சிட்டிகை

*உப்பு – தேவையான அளவு

*பொரிக்க எண்ணெய் – தேவையான அளவு

முட்டை பிரெட் ரோல் செய்முறை விளக்கம் : முட்டை பிரட் ரோல் செய்வதற்கு முதலில் தேவையான எல்லா பொருட்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். நான்கு ரோல் செய்வதற்கு இந்த அளவுகள் சரியாக இருக்கும். உங்கள் தேவைக்கு ஏற்ப நீங்கள் பிரட் துண்டுகளை எடுத்துக் கொள்ளுங்கள். எடுத்து வைத்துள்ள பிரட் துண்டுகளின் ஓரத்தில் இருக்கக் கூடிய தடிமனான பகுதியை வெட்டி நீக்கி விடுங்கள். இந்த தோல் பகுதியை மிக்ஸர் ஜாரில் சேர்த்து பொடியாக அரைத்து வைத்துக் கொள்ளுங்கள்.

ஒருபுறம் ஒரு தட்டில் மிளகாய் தூள், மிளகு தூள் மற்றும் உப்பு ஆகியவற்றை ஒன்றாக கலந்து வைத்துக் கொள்ளுங்கள். ரெண்டு முட்டையை நன்கு அவித்து எடுத்துக் கொள்ள வேண்டும். அவித்த முட்டைகளை பாதியாக நீள வாக்கில் வெட்டி வைத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது நான்கு முட்டைகள் கிடைத்து விட்டது. முட்டையின் மீது நீங்கள் கலந்து வைத்துள்ள மிளகு பொடியை தூவுங்கள்

.பிறகு வெட்டி வைத்துள்ள பிரட் துண்டுகளை தண்ணீரில் லேசாக நனைத்து பிழிந்து எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு துண்டு முட்டையை பிரட்டுக்குள் வைத்து நன்கு மூடி உருண்டையாக பிடித்துக் கொள்ள வேண்டும். இந்த உருண்டையை நீங்கள் அரைத்து வைத்துள்ள பிரட் தூளில் நன்கு பிரட்டி வைத்துக் கொள்ளுங்கள். அனைத்து முட்டைகளையும் இது போல பிரட்டுக்குள் வைத்து உருண்டை பிடித்து தூளில் போட்டு பிரட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வானலியை வையுங்கள். இந்த ரோல்களை பொன்னிறமாக வறுத்து எடுக்க தேவையான அளவிற்கு எண்ணெய் விட்டு காய விடுங்கள். எண்ணெய் காய்ந்ததும் ஒவ்வொரு ரோலையும் போட்டு நன்கு எல்லா புறமும் சிவக்க வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள். அவ்வளவுதான், சூப்பரான முட்டை பிரட் ரோல் ரெசிபி ரொம்ப சுலபமாக தயார்! இதே மாதிரி பிரட்டும், முட்டையும் இருந்தா நீங்களும் உங்க வீட்டில் பத்து நிமிஷத்தில் தயார் செஞ்சு சாப்பிட்டு பாருங்க, ரொம்பவே ருசியாக இருக்கும்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular