Saturday, September 23, 2023
Homeநியூஸ்லோக்சபாவில் சீறிய ராகுல்..! சமூகவலைதளத்தில்

லோக்சபாவில் சீறிய ராகுல்..! சமூகவலைதளத்தில்

மணிப்பூர் விவகாரத்தில் பாரத மாதாவை கொன்றுவிட்டதாக லோக்சபாவில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் 2வது நாள் விவாதத்தில் ராகுல் பேசினார். ராகுலின் பேச்சுக்கு மத்திய அமைச்சர்கள் பதிலடி கொடுக்கவே லோக்சபாவில் விவாதம் சூடுபறந்தது.

லோக்சபாவில் மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்தின் 2வது நாள் விவாதம் இன்று பரபரப்புடன் துவங்கியது. நண்பகல் 12 மணியளவில் பேசிய காங்.,எம்.பி., ராகுல்,

‘முதலில் என்னை மீண்டும் எம்.பியாக அனுமதி வழங்கியதற்கு சபாநாயகருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். மணிப்பூர் பற்றியே பேசுவேன். அதானி குறித்து எதுவும் பேச போவதில்லை. பா.ஜ., எம்.பிக்கள் அச்சப்பட வேண்டாம். அன்பு செலுத்தவே நடைப்பயணம் சென்றேன். சில தினங்களுக்கு முன், மணிப்பூர் சென்றிருந்தேன்.

நம் பிரதமர் இதுவரை செல்லவில்லை. ஏனென்றால், அவருக்கு மணிப்பூர் என்பது இந்தியாவில் இல்லை. மணிப்பூர் என்று வார்த்தையால் கூறுகிறேன். ஆனால் இப்போது மணிப்பூர் ஒன்றாக இல்லை. இரண்டாக பிரிந்து கிடக்கிறது. மணிப்பூரை உடைத்து விட்டீர்.

மணிப்பூரில் இந்தியாவை கொன்றுவிட்டீர்கள். மணிப்பூரில் பாரத மாதாவை கொன்றுவிட்டீர். பிரதமர் விரும்பினால் நான் சிறை செல்லவும் தயார். இலங்கை தீவு ஹனுமனால் எரிக்கப்படவில்லை. மாறாக ராவணனின் அகங்காரத்தால் அழிந்தது. மணிப்பூர் வன்முறையில் கெரசினை ஊற்றியது பா.ஜ., தான். தற்போது ஹரியானாவில் இதே நிலை தொடர்கிறது.’

இவ்வாறு அவர் பேசினார்.

பிரதமர் குறித்த ராகுலின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ., எம்.பிக்கள் கடும் கோஷம் எழுப்பியதால் லோக்சபாவில் அமளி ஏற்பட்டது. இதனிடையே ராகுலின் பேச்சை இடைமறித்து அமைச்சர் கிரண் ரிஜிஜூ பேசுகையில், ‘ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும். வடகிழக்கு பயங்கரவாதம் பரவியதற்கு காங்கிரஸ் கட்சியே பொறுப்பு. அவர்கள் வடகிழக்கு மக்களை கொன்று குவிக்கின்றனர்’என குறிப்பிட்டார். நம்பிக்கையில்லா தீர்மானத்தில் பேசி முடித்த ராகுல், ராஜஸ்தான் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக புறப்பட்டு சென்றார்.

தொடர்ந்து பேசிய மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, ‘நீங்கள் இந்தியா இல்லை. ஏனெனில் இந்தியாவில் ஊழல் இல்லை. இந்தியா வாரிசை அல்ல… தகுதியை நம்புகிறது. இந்தியாவில் இருந்து வெளியேறு என உங்களைப் போன்றவர்கள் ஆங்கிலேயர்களிடம் சொன்னதை நினைவில் கொள்ள வேண்டும் ஊழல், வாரிசு இல்லாத இந்தியா உள்ளது. தகுதியானவரிடம் இந்தியா இப்போது உள்ளது.

மணிப்பூர் விவகாரம் குறித்து அவையில் பேச தயாராக இருப்பதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்பட நாங்கள் மீண்டும் மீண்டும் கூறினோம். எதிர்க்கட்சிகள் தான் அவையை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.’

தொடர்ந்து லோக்சபாவில் விவாதம் நடந்து வருகிறது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular