விண்ணப்பங்கள் வாங்க பொதுமக்கள் ரேஷன் கடைகளுக்கு செல்ல தேவையில்லை என தெரிவிக்கப்பட்டிருந்தது.

குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 வழங்கும் திட்டத்தை, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் என்ற பெயரில் அறிவித்து, அதற்கான பணிகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது.

ஒரு கோடி பெண்களுக்கு முதல் கட்டமாக இந்த உதவி தொகை வழங்க அரசு முடிவு செய்துள்ளது. மாதம் தோறும் பெண்களின் வங்கி கணக்கில் ரூ.1000 செலுத்த ரேஷன் கடைகள் மூலம் தகுதியானர்களை தேர்வு செய்து விண்ணப்பம் மற்றும் டோக்கன் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.
ரேஷன் கடை ஊழியர்கள் வீடு, வீடாக சென்று டோக்கன்களையும் விண்ணப்பங்களையும் விநியோகித்தனர். விண்ணப்பங்கள் வாங்க பொதுமக்கள் ரேஷன் கடைகளுக்கு செல்ல தேவையில்லை என தெரிவிக்கப்பட்டிருந்தது.
விண்ணப்பப் பதிவுக்கான முதற்கட்ட முகாம் ஆகஸ்ட் 8ஆம் தேதி வரையும், 2ஆம் கட்ட முகாம் ஆகஸ்ட் 5 முதல் 16ஆம் தேதி வரையும் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
