Saturday, September 30, 2023
Homeஆரோக்கியம்ரவா லட்டு

ரவா லட்டு

ரவா லட்டு அல்லது ரவா சுஜி கர்நாடகாவில் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு இனிப்பு வகை. இவை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான ஒரு இனிப்பு வகையாக திகழ்கிறது.

தேவையான பொருட்கள்

200 கிராம் ரவை

150 கிராம் சர்க்கரை

1/2 லிட்டர் பால்

1/2 கப் துருவிய தேங்காய்

2 மேஜைக்கரண்டி உலர் திராட்சை

1 மேஜைக்கரண்டி ஏலக்காய் தூள்

10 to 15 முந்திரி

தேவையான அளவு பாதாம்

தேவையான அளவு நெய்

செய்முறை

முதலில் தேங்காயை துருவி, ஏலக்காயை தூள் செய்து, மற்றும் முந்திரியை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்து கொள்ளவும்.

அடுத்து ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் ஒரு மேஜைக்கரண்டி அளவு நெய்யை ஊற்றி அதை சுட வைக்கவும்.

நெய் சுட்டதும் அதில் நாம் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்திருக்கும் முந்திரியை போட்டு அதை சிறிது நிறம் மாறும் வரை வறுத்து எடுத்து ஒரு கிண்ணத்தில் வைத்து கொள்ளவும்.

பின்பு அதே pan ல் உலர் திராட்சையை போட்டு திராட்சை உப்பும் வரை வறுத்து அதையும் எடுத்து ஒரு கிண்ணத்தில் வைத்து கொள்ளவும்.

இப்பொழுது ஒரு கடாயை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் சுமார் 4 மேஜைக்கரண்டி அளவு நெய் ஊற்றி அதை சுட வைக்கவும்.

நெய் சுட்ட பின் அதில் ரவை மற்றும் நாம் துருவி வைத்திருக்கும் தேங்காயை போட்டு ரவை சிறிது நிறம் மாறும் வரை வறுத்து எடுத்து ஒரு தட்டில் வைத்து சிறிது நேரம் அதை ஆற விடவும். (தேங்காயை விரும்பாதவர்கள் அதை தவிர்த்து விடலாம்.)

கடைகளில் இருந்து வறுத்த ரவையை வாங்கியிருந்தாலும் அதை மீண்டும் ஒருமுறை இவ்வாறு நான்கு வறுத்து கொள்ளவும் அப்பொழுதுதான் லட்டு நன்றாக இருக்கும்.

பின்பு சர்க்கரையை எடுத்து ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அதை நன்கு பொடித்து தனியாக ஒரு தட்டில் கொட்டி வைக்கவும்.

அடுத்து நாம் வறுத்து வைத்திருக்கும் ரவை ஆறிய பின் அதையும் மிக்ஸி ஜாரில் போட்டு சுமார் 2 சுத்து சுத்தி அதையும் எடுத்து தனியாக ஒரு தட்டில் வைத்து கொள்ளவும். (ரவையை நைசாக அரைத்து விடகூடாது.)

இப்பொழுது ஒரு பாத்திரத்தை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் பாலை ஊற்றி அது வெது வெதுப்பான பதம் வரும் வரை அதை சுட வைத்து அடுப்பை அணைத்து விட்டு பாலை அடுப்பிலேயே வைத்திருக்கவும்.

பின்னர் ஒரு bowl ல் நாம் அரைத்து வைத்திருக்கும் ரவை மற்றும் சர்க்கரையை கொட்டி அதனுடன் நாம் சிறு சிறு துண்டுகளாக்கி வைத்திருக்கும் முந்திரி, அரைத்து வைத்திருக்கும் ஏலக்காய் தூள், மற்றும் உலர் திராட்சையை போட்டு கையின் மூலம் அதை நன்கு கலந்து கொள்ளவும்.

பின்னர் நாம் சுட வைத்து வைத்திருக்கும் பாலில் இருந்து சுமார் 2 அல்லது 3 மேஜைக்கரண்டி பாலை எடுத்து இந்த bowl ன் நடுவே ஊற்றி அதை சுற்றி இருக்கும் மாவில் ஒரு கைப்பிடி அளவு மாவை எடுத்து அதை நன்கு இறுக்கமாக பிடித்து அதனுடன் ஒரு பாதாமையும் வைத்து ஒரு தட்டில் வைத்து கொள்ளவும்.

இவ்வாறு மீதமுள்ள மாவையும் ஒவ்வொன்றாக பிடித்து ஒரு தட்டில் வைத்து சுட சுட பரிமாறவும்.

இப்பொழுது உங்கள் சூடான மற்றும் சுவையான ரவா லட்டு தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து சுவைத்து மகிழுங்கள்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular