குழந்தைகளுக்கு மாலை நேரத்தில் என்ன ஸ்னாக்ஸ் செய்து கொடுக்கலாம் என்று யோசிக்கிறீர்களா அப்போ இந்த ரவை புட்டு செய்து கொடுத்து பாருங்க மீண்டும் மீண்டும் எப்போ கொடுத்து என்று கேட்பார்கள்
தேவையான பொருட்கள்
1 கப் ரவை
¼ டீஸ்பூன் உப்பு
3 ஏலக்காய் பொடி
தேங்காய் துருவல் தேவையான அளவு
சர்க்கரை அல்லது நாட்டு சர்க்கரை தேவையான அளவு
செய்முறை
முதலில் ரவையை மிதமான தீயில் 5 நிமிடம் சிவக்கவோ அல்லது கருகாமல் வறுத்துக்கொள்ளவும்.பிறகு அதனை தனியாக தட்டில் எடுத்து வைத்து ஆறவிடவும்.
ஆறியது ½ கப் அளவிற்கு வைத்து எடுத்து அதில் உப்பு சேர்த்து கரைந்ததும் ஆறவைத்த ரவையில் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி பொல பொலவென்று புட்டு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.
பிறகு அதை சல்லடையில் போட்டு சலித்து கொள்ளவும்.
சலித்த ரவையில் ஏலக்காய் பொடி, தேங்காய் துருவல் சேர்த்து கலந்து இட்லி சட்டியில் வேகவைத்து எடுக்கவும்.
வெந்ததும் அதன் மேல் தேவையான அளவு சர்க்கரை மற்றும் தேங்காய் துருவல் சேர்த்து பரிமாறவும், தேவைப்பட்டால் நெய் சேர்த்துக்கொள்ளலாம். முந்திரியை, திராட்சை நெய்யில் வறுத்து சேர்த்துக்கொள்ளலாம்.
இப்பொழுது சுவையான ரவை புட்டு தயார்.