ரவா கேக் ஒரு பஞ்சு போன்ற மற்றும் சுவையான கேக். இது ரவை, சர்க்கரை, தயிர், ஆகியவற்றை கொண்டு செய்யப்படுகிறது. பொதுவாக கேக், மைதா மாவு, கோதுமை மாவு, அல்லது கேக் மாவு போன்றவற்றை கொண்டு செய்யப்படும். அதுதவிர ரவையில் முட்டை சேர்த்து செய்யப்படும் கேக் “பாஸ்போசா” என்று அழைக்கப்படுகிறது. இது அரேபிய நாடுகளில் மிகவும் பிரபலம். முட்டை சேர்க்காத ரவா கேக் மிகவும் மென்மையான சுவையான கேக். மிகவும் எளிமையான முறையில் அனைவரும் செய்யலாம்.
ரவா கேக் செய்ய தேவையா பொருட்கள்
- 1 கப் ரவை
- 3/4 கப் சர்க்கரை
- 1/2 கப் தயிர்
- 1/4 கப் உருகிய வெண்ணெய்
- 1/2 கப் பால்
- 1/4 கப் டூட்டி ஃப்ரூட்டி
- 1/4 தேக்கரண்டி பேக்கிங் சோடா
- 1 தேக்கரண்டி பேக்கிங் பவுடர்
- 1/4 கப் மைதா + 1 தேக்கரண்டி மைதா
- 1 தேக்கரண்டி வெண்ணிலா எஸ்ஸென்ஸ்
செய்முறை
1. ஒரு மிக்ஸி ஜாரில் ஒரு கப் ரவை மற்றும் முக்கால் கப் சர்க்கரை சேர்த்து நைஸாக அரைத்துக் கொள்ளவும்.
2.ஒரு அகலமான பாத்திரத்தில் அரை கப் கெட்டியான தயிர் சேர்த்துக் கொள்ளவும். அதனுடன் கால் கப் அளவு உருகிய வெண்ணெய் சேர்த்து கொள்ளவும்.
3. கட்டியில்லாமல் நன்றாகக் கலக்கிக் கொள்ளவும்.
4. இப்பொழுது அரைத்து வைத்துள்ள ரவை மற்றும் சர்க்கரை கலவையை சேர்த்து கலக்கவும்.
5. அதனுடன் கால் கப் பால் சேர்த்து கலக்கவும்.
6. இப்பொழுது இப்போது மூடி 30 நிமிடங்களுக்கு ஊற வைக்கவும்.
7. ஒரு சிறிய பௌலில் கால் கப் டூட்டி ஃப்ரூட்டி சேர்த்துக் கொள்ளவும் அதனுடன் ஒரு தேக்கரண்டி மைதா மாவு சேர்த்து கலக்கி தனியே வைக்கவும்.
8. 30 நிமிடங்களுக்குப் பிறகு தயாராக உள்ள மாவில் டூட்டி ஃப்ரூட்டி சேர்த்துக் கொள்ளவும் அதனுடன் கால் தேக்கரண்டி பேக்கிங் சோடா, மற்றும் ஒரு தேக்கரண்டி பேக்கிங் பவுடர், கால் கப் மைதா, ஆகியவற்றை சேர்த்து கலக்கவும்.
இப்பொழுது கால் கப் பால் சேர்த்து மீண்டும் கலந்து கொள்ளவும்.
10. கடைசியாக ஒரு தேக்கரண்டி வெண்ணிலா எசென்ஸ் சேர்த்து கலக்கவும்.
11. மாவு கெட்டியாக இல்லாமல் இலகுவாக கலக்கிக் கொள்ளவும்.
12. இப்பொழுது ஒரு ஆறு இன்ச் அளவு பேன் அல்லது அடி தட்டையான பாத்திரத்தில் வெண்ணெய் தடவிக் கொள்ளவும். தயாராக வைத்துள்ள மாவை அதனுடன் சேர்க்கவும்.
13. அடுப்பில் ஒரு அகலமான பேன் வைத்து, அதனுள் ஒரு ஸ்டாண்ட் வைத்து, மூடி போட்டு 10 நிமிடங்களுக்கு மிதமான சூட்டில் சூடாக்கவும்.
14. பின்னர் தயாராக வைத்துள்ள மாவை அதனுள் வைத்து மூடி வைத்து 50 முதல் 60 நிமிடங்களுக்கு குறைவான தீயில் வேக வைக்கவும்.
15. ஒரு மணி நேரத்திற்குப் பின்னர் கேகே வெளியே எடுத்து ஆற வைத்து பரிமாறவும்.
16. சுவையான ரவா கேக் தயார்.
