Tuesday, October 3, 2023
Homeசினிமா ரஜினிகாந்த் : ஜார்கண்ட் ஆளுனருடன் திடீர் சந்திப்பு

 ரஜினிகாந்த் : ஜார்கண்ட் ஆளுனருடன் திடீர் சந்திப்பு

இமயமலை பயணத்தை முடித்துக் கொண்ட தமிழ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது ராஞ்சியில் ஜார்கண்ட் கவர்னர் சிபி ராதாகிருஷ்ணனை சந்தித்து பேசினார்.

இமயமல சுற்றுபயணம் சென்று திரும்பியுள்ள நடிகர் ரஜினினிகாந்த், ராஞ்சியில் இருக்கும் ஜார்கண்ட் மாநில ஆளுனர் சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படம் கடந்த ஆகஸ்ட் 10-ந் தேதி வெளியானது. மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத்த இசையமைத்திருந்த நிலையில், சன் பிச்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தாயரித்திருந்தது.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் ஹிட்டடித்துள்ள ஜெயிலர் படம் இந்தியில் கதார் 2 படத்திற்கு போட்டியாள உள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே ஜெயிலர் படத்தை தொடர்ந்து அடுத்ததாக ரஜினிகாந்த் ஜெய் பீம் புகழ் டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இதனிடையே ஜெயிலர் படம் வெளியாகும் முன்பே நடிகர் ரஜினிகாந்த் இமயமலை சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார்.

தற்போது தனது இமயமலை சுற்றுப்பயணத்தில் இருந்து திரும்பியுள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடனடியாக ராஞ்சியில் ஜார்கண்ட் மாநில கவர்னர் சிபி ராதாகிருஷ்ணனை சந்தித்துள்ளார். தமிழகத்தைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன், பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவராக இருந்தார். இவர்கள் இருவரும் சந்தித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

ரஜினிகாந்தை சந்தித்தது குறித்த விவரங்களை புகைப்படத்துடன் வெளியிட்டுள்ள சி.பி.ராதாகிருஷ்ணன், ராஞ்சிக்கு வந்தவுடன், இந்தியாவின் தலைசிறந்த நடிகர்களில் ஒருவரும், சிறந்த மனிதநேயமிக்க சூப்பர் ஸ்டாருமான, எனது அன்பு நண்பரை சந்தித்ததில் மகிழ்ச்சியடைகிறேன். ரஜினிகாந்த் நேற்று ராஜ்பவனில் மரியாதை நிமித்தமான என்னை சந்தித்தார். ஜார்கண்ட் மாநிலத்திற்கு அவரை நான் மனதார வரவேற்கிறேன்.இந்த சந்திப்பின் போது ஆளுநருக்கு ரஜினிகாந்த் ஆன்மீக புத்தகத்தை பரிசாக வழங்கினார்.

ரஜினிகாந்தின் ஜெயிலர் படம் பாக்ஸ் ஆபிஸில் விரைவாக ரூ.150 கோடியைத் தாண்டிய தமிழ்த் திரைப்படம் வரலாற்றில் சாதனை படைத்துள்ளது. இப்படம் உலகம் முழுவதும் இதுவரை 450 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. படம் வெளியாவதற்கு முன்பே ரஜினிகாந்த் தனது பயணத்திற்கு புறப்பட்ட நிலையில், அவர் சென்னை திரும்பியதும் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular