முட்டைபொடிமாஸ் அனைத்து சாதத்தோடும் உண்பதற்க்கு ஒரு அருமையான சைடிஷ்.
தேவையான பொருட்கள்
- 4 முட்டை
- 2 பெரிய வெங்காயம்
- 1 தக்காளி
- 2 பச்சை மிளகாய்
- 1 சிட்டிகை கடுகு
- ½ மேஜைக்கரண்டி சீரகம்
- 1 சிட்டிகை மஞ்சள் தூள்
- ¼ மேஜைக்கரண்டி கரம் மசாலா
- ¼ மேஜைக்கரண்டி மிளகு தூள்
- தேவையான அளவு மிளகாய் தூள்
- தேவையான அளவு உப்பு
- தேவையான அளவு எண்ணெய்
- சிறிதளவு கருவேப்பிலை
- சிறிதளவு கொத்தமல்லி
செய்முறை
முதலில் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், கருவேப்பிலை, மற்றும் கொத்தமல்லியை நறுக்கி எடுத்து ஒரு தட்டில் வைத்து கொள்ளவும்.
அடுத்து ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் 2 மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி அதை சுட வைக்கவும்.
எண்ணெய் சுட்ட பின் அதில் கடுகை போட்டு கடுகு வெடித்ததும் அதில் சீரகம், நாம் நறுக்கி வைத்திருக்கும் பச்சை மிளகாய், மற்றும் கருவேப்பிலையை போட்டு அதை நன்கு கலந்து விட்டு சுமார் அரை நிமிடம் வரை வறுக்கவும்.
அரை நிமிடத்திற்கு பிறகு அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தை போட்டு வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை அதை வதக்கவும்.
வெங்காயம் கண்ணாடி பதம் வந்ததும் அதில் மஞ்சள் தூள், கரம் மசாலா, ஒரு சிட்டிகை மிளகு தூள், ஒரு சிட்டிகை உப்பு, மற்றும் அவரவர் விருப்பத்திற்கேற்ப மிளகாய் தூளை சேர்த்து அதை நன்கு கலந்து விடவும்.
பின்பு அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் தக்காளியை சேர்த்து அதை நன்கு கலந்து விட்டு சுமார் ஒரு நிமிடம் வரை வேக விடவும். (தேவைப்பட்டால் அதில் சிறிதளவு தண்ணீர் தெளித்து கொள்ளவும்.)
ஒரு நிமிடத்திற்கு பிறகு வெங்காயத்தை pan னின் ஓரத்துக்கு தள்ளி ஒரு மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி பின்பு அதில் முட்டைகளை உடைத்து ஊற்றி அதனுடன் தேவையான அளவு உப்பு மற்றும் சிறிதளவு மிளகு தூளை சேர்த்து அதை நன்கு கலந்து விடவும்.
முட்டை வெந்ததும் அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் கொத்தமல்லியை தூவி ஒரு கிளறு கிளறி அடுப்பை அணைத்து விட்டு முட்டை பொடிமாஸ்ஸை எடுத்து ஒரு தட்டில் வைத்து அதை சுட சுட பரிமாறவும்.
இப்பொழுது உங்கள் சூடான மற்றும் மிகவும் சத்தான முட்டை பொடிமாஸ் தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து சுவைத்து மகிழுங்கள்.
