Saturday, September 30, 2023
Homeநியூஸ்மாநில அரசுகளுக்கு ரிசர்வ் வங்கி அளித்த எச்சரிக்கை

மாநில அரசுகளுக்கு ரிசர்வ் வங்கி அளித்த எச்சரிக்கை

Old Pension Scheme: ரிசர்வ் வங்கி பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் கொண்டு வருவது குறித்து மாநில அரசுகளை எச்சரித்துள்ளது. 

நாட்டில் உள்ள கிட்டத்தட்ட அனைத்து மாநிலங்களிலும் பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்த பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன.

சில மாநிலங்கள் அதை செயல்படுத்தியும் உள்ளன.

இந்த மாநிலங்களின் நிதி பிரச்சினைகள் கணிசமாக அதிகரிக்கும் என ரிசர்வ் வங்கி கருதுகிறது.

Old Pension Scheme, Latest Update: பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்கள் நீண்ட நாட்களாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதற்காக பல கட்ட பேச்சுவார்த்தைகளும் நடந்துள்ளன. மத்திய அரசு ஊழியர்களுக்கு தேசிய ஓய்வூதிய திட்டத்தில் அதிகப்படியான பலன்களை அளிப்பதை உறுதி செய்ய மத்திய அரசு ஒரு குழுவை அமைத்துள்ளது. இதற்கிடையில் பல மாநில அரசுகள் தங்கள் ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தி உள்ளன. குறிப்பிட்ட சில ஊழியர்கள் விரைவில் பழைய ஓய்வூதியத் திட்டத்தின் பலனைப் பெறவுள்ளனர். 

நாட்டில் உள்ள கிட்டத்தட்ட அனைத்து மாநிலங்களிலும் பழைய ஓய்வூதியத் திட்டம் (Old Pension Scheme) குறித்த பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. சில மாநிலங்கள் அதை செயல்படுத்தியும் உள்ளன. அத்தகைய சூழ்நிலையில், இந்த மாநிலங்களின் நிதி பிரச்சினைகள் கணிசமாக அதிகரிக்கும் என ரிசர்வ் வங்கி கருதுகிறது. ரிசர்வ் வங்கி பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் கொண்டு வருவது குறித்து மாநில அரசுகளை எச்சரித்துள்ளது. நேஷனல் பிசிக்கல் ஹொரைசானுக்கு இது மிகப்பெரிய பிரச்சனை என்று ரிசர்வ் வங்கி கூறியுள்ளதாக கூறப்படுகிறது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular