பால்கோவா ஒரு சுவையான சுத்தமான பாலில் செய்யப்பட்ட இனிப்பு வகை, பால்கோவா பல வழிகளில் செய்யலாம். பால் பவுடர், பன்னீர், அல்லது கண்டன்ஸ்டு மில்க், ஆகியவற்றை கொண்டு செய்யலாம். ஆனால் பாரம்பரியமிக்க பால்கோவா, பால், சர்க்கரை, எலுமிச்சம் பழசாறு, ஏலக்காய் பொடி, ஆகியவற்றை கொண்டு செய்யப்படுகிறது. இந்த வகையான பால்கோவா செய்வதற்கு 2 லிட்டர் பாலுக்கு, 2 மணி நேரம் ஆகும். இது சுவையாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும். நீங்களும் பாரம்பரியமிக்க பால்கோவா செய்து சுவைத்து மகிழுங்கள்
தேவையான பொருட்கள்
.
பால் – 2 லிட்டர்
சர்க்கரை – 1 கப்/ 200 கிராம்
எலுமிச்சம் பழம்-1
ஏலக்காய் பொடி- ½ தேக்கரண்டி
நெய் – 1 தேக்கரண்டி
செய்முறை
ஒரு அகன்ற பாத்திரத்தில் 2 லிட்டர் அளவு பாலை சேர்த்து சூடாக்கவும்
அடி பிடிக்காமல் இருப்பதற்கு அவ்வப்போது கிளறி விடவும்.
ஒரு மணி நேரத்திற்கு பிறகு பால் சுண்டி பாதி அளவாக ஆகும் வரை மிதமான சூட்டில் வைக்கவும்.
பின்னர் ஒரு எலுமிச்சம் பழத்தின் சாறை பிழிந்து அதனுடன் சேர்க்கவும்.
பால் திரிந்து வருவதை பார்க்கலாம்
பால் பிரிந்த பிறகு, 1 கப் சர்க்கரை மற்றும் 1/2 தேக்கரண்டி ஏலக்காய் பொடி சேர்த்து சர்க்கரை கரையும் வரை கலக்கவும்.
ஒன்றரை மணி நேரத்திற்குப் பிறகு பால் சுண்டி திரண்டு வருவதை காணலாம். ஒரு தேக்கரண்டி நெய் சேர்த்து கிளறவும்.
பால்கோவா ஒன்றாக சேர்ந்து வரும் பொழுது அடுப்பை அணைத்து விடவும்.
நெய் தடவிய பாத்திரத்தில் பால்கோவாவை போட்டு, ஒரு ஸ்பூனால் அழுத்தி விடவும். 6 முதல் 8 மணி நேரங்களுக்கு அப்படியே வைக்கவும்.
சிறுசிறு துண்டுகளாக வெட்டி பால்கோவாவை பரிமாறலாம்.
