Tuesday, October 3, 2023
Homeஆரோக்கியம்பன்னீர் பட்டர் மசாலா

பன்னீர் பட்டர் மசாலா

பன்னீர் பட்டர் மசாலா மிகவும் சுவையான உணவு வகை இது பஞ்சாபிலிருந்து  பெறப்பட்டது. ஆனால் இந்தியா முழுவதும் மிக மிகப் பிரபலமானது. பன்னீர் பட்டர் மசாலா, ரொட்டி, பரோட்டா, நான், புல்கா, பிரியாணி, ப்ரைட் ரைஸ், ஆகியவற்றுடன் மிகவும் சுவையாக இருக்கும். இது வெண்ணை, முந்திரிப்பருப்பு, தக்காளி போன்றவற்றை கொண்டு செய்யப்படுகிறது. பன்னீர் பட்டர் மசாலா, பன்னீர் மக்னி  என்றும் அழைக்கப்படுகிறது. 

தேவையான பொருட்கள்

  • பன்னீர் – 200 கிராம்
  • வெண்ணெய் – 200 கிராம்
  • கடலை எண்ணெய் – 50 கிராம்
  • வெங்காய விழுது – 200 கிராம்
  • தக்காளி விழுது – 200 கிராம்
  • பிரியாணி இலை – 2
  • கிராம்பு – 2

செய்முறை

  1. முதலில் அடுப்பில் கடாயை வைத்து அதில் சம அளவு எண்ணெய் மற்றும் வெண்ணெய் சேர்த்து சூடாக்கவும்.
  2. பின்பு அதில் கிராம்பு, பிரியாணி இலை, அன்னாசி பூ சேர்த்து தாளித்து அதில் வெங்காய விழுதை சேர்த்து நன்கு வதக்கவும்.
  3. அடுத்து இஞ்சி பூண்டு விழுது சேர்த்து இரண்டையும் பச்சை வாசனை போகும் வரை எண்ணெய்யில் வதக்கவும்.
  4. இப்போது தக்காளி விழுது சேர்த்து நன்கு கலந்து அதில் தயிர் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து நன்கு கிளறவும்.
  5. பின்பு அதில் 20 முந்திரி பருப்புகளை திக் பேஸ்ட் போல் அரைத்து சேர்க்கவும். தேவையான அளவு உப்பு போட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றவும்.
  6. கலவையை விடாமல் கரண்டியால் கிளறவும். அடுத்து இதில் தேங்காய் பால் சேர்த்து கொதிக்க விடவும்.
  7. முதல் கொதி வந்ததும் அதில் பன்னீர் துண்டுகளை சேர்த்து அதன் மேல் ஃபிரஷ் கிரீமை ஊற்றவும்.
  8. இரண்டையும் நன்கு கலந்து விட்டு இறுதியாக கொத்தமல்லி, கஸ்தூரி மேத்தி மற்றும் பச்சை மிளகாய் சேர்க்கவும்.
  9. அடுப்பை மிதமான தீயில் வைத்து 10 நிமிடம் கொதிக்க விடவும். அவ்வளவு தான் அசத்தலான பன்னீர் பட்டர் மசாலா தயார்.
    இதை சப்பாத்தி, நெய் சோறு, புலாவ் ஆகியவற்றுடன் சேர்த்து பரிமாறினால் வீட்டில் இருப்பவர்கள் ஒருபிடி பிடிப்பார்கள். நீங்களும் கண்டிப்பாக வீட்டிலேயே பன்னீர் பட்டர் மசாலாவை செய்து குடும்பத்துடன் உண்டு மகிழுங்கள். இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம்.

.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular