Saturday, September 23, 2023
Homeஆரோக்கியம்பன்னீர் கச்சோரி ரெசிபி!

பன்னீர் கச்சோரி ரெசிபி!

சுவையான பனீர் கச்சோரி உணவை உங்கள் வீட்டு சமையலறையிலேயே, எப்படி எளிதாக சமைக்கலாம் என்பதை பார்க்கலாம்.

தேவையானவை: 

  • துருவிய பனீர்
  • மைதா மாவு தலா ஒரு கப்
  • சேமியா – கால் கப்
  • ஓமம் – அரை டீஸ்பூன்
  • பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன்
  • வறுத்த எள்
  • பொட்டுக்கடலை மாவு – தலா 2 டேபிள்ஸ்பூன்
  • பச்சை மிளகாய் விழுது – 2 டீஸ்பூன்
  • துருவிய இஞ்சி
  • நறுக்கிய கொத்தமல்லி
  • தலா ஒரு டீஸ்பூன் எண்ணெய்
  • உப்பு – தேவையான அளவு.

செய்முறை: மைதா மாவு, உப்பு, சேமியாவுடன் ஒரு டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து சப்பாத்தி மாவு போல் பிசைந்து கொள்ளவும். கடாயில் சிறிதளவு எண்ணெயை சூடாக்கி, ஓமம் தாளித்து கொள்ளவும்.

துருவிய பனீர், வறுத்த எள், பொட்டுக்கடலை மாவு, பச்சை மிளகாய் விழுது, இஞ்சி, கொத்தமல்லி, உப்பு இவற்றுடன் தாளித்த ஓமம், பெருங்காயத்தூள் சேர்த்துப் பிசையவும்.

மைதா மாவு கலவையை சிறிய கிண்ணம் போல் செய்து, அதனுள் பனீர் கலவையை வைத்து மூடி வட்ட வடிவமாக தட்டவும்.

கடாயில் எண்ணெயை சூடாக்கி, வட்ட வடிவமாக தட்டி வைத்தவற்றை இரண்டு இரண்டாக போட்டு பொரித்தெடுத்தால்… சுவையான கச்சோரி ரெடி.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular