மொஹாலி: ஐபிஎல் தொடரில் நாங்கள் ஒன்றும் மோசமான அணி கிடையாது என்று ஆர் சி பி அணியின் கேப்டனாக இன்று களம் இறங்கிய விராட் கோலி கூறியுள்ளார். பஞ்சாப் அணிக்கு எதிரான முக்கிய ஆட்டத்தில் பெங்களூர் அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதன் மூலம் மூன்று வெற்றி மூன்று தோல்வியை தழுவியுள்ள ஆர் சி பி அணி 6 புள்ளிகள் உடன் தற்போது புள்ளி பட்டியலில் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளது. இந்த ஆட்டத்தில் விராட் கோலி அரை சதம் அடித்தார்.எனினும் அவருடைய ஸ்ட்ரைக் கிட் மிகக் குறைவாக இருந்தது.
வெற்றிக்குப் பிறகு பேசிய கேப்டன் விராட் கோலி இந்த வெற்றி எங்கள் அணியை அசைக்க முடியாத அணியாக மாற்றவில்லை அதே போன்று இந்த வெற்றிக்கு முன்பு நாங்கள் புள்ளி பட்டியலில் கீழே இருந்ததால் நாங்கள் ஒன்றும் மோசமான அணியும் இல்லை. புள்ளி பட்டியலில் நாம் எந்த இடத்தில் இருக்கிறோம் என்பது உங்களைப் பற்றி சொல்லாது.
அதுவும் நாங்கள் இப்போதுதான் ஐந்து அல்லது ஆறு போட்டிகளில் விளையாடுகிறோம். இதனால் தொடர்ந்து உழைக்க வேண்டும். நிகழ்காலத்தில் இருக்க வேண்டும். நாங்கள் முதலில் பேட்டிங் செய்யும்போது ஆடுகளத்தின் தன்மை முற்றிலுமாக மாறியது. அதற்கு தகுந்தாற்போல் டுப்ளசிஸ் விளையாடினார்.நாங்கள் முடிந்தவரை எங்களுடைய பார்ட்னர்ஷிப்பை நீட்டிக்க வேண்டும் என விரும்பினோம்.
Australia-க்கு ஏதிராக Ashwin பயன்படுத்திய Two-Card Trick Bowling அப்படி செய்தால் நாங்கள் இன்னும் கூடுதலாக 20 ரன்கள் எடுத்திருக்க முடியும். 7,8 ஓவர்கள் முடிந்த பிறகு ஆடுகளத்தின் தன்மை மாறியது. எனவே எங்களுடைய போட்டியின் உத்தியையும் நாங்கள் மாற்றினோம். கடைசி வரை ஆட்டம் இழக்காமல் இருக்க வேண்டும் என நினைத்தோம். அப்படி நாங்கள் செய்திருந்தால் நிச்சயம் 200 ரன்களை கூட தொட்டிருக்க முடியும்.
ஆனால் 175 ரன்கள் என்பது இந்த ஆடுகளத்தில் மிகவும் நல்ல ஸ்கோர் தான். நான் எங்களுடைய பந்துவீச்சாளர்களிடம் நெஞ்சை நிமிர்த்தி விளையாடுங்கள். அதனை கட்டுப்படுத்தி எந்த பயனும் இல்லை. முடிந்தவரை விக்கெட்டுகளை எடுக்க பாருங்கள் என்று கூறினேன். இப்போதெல்லாம் டி20 கிரிக்கெட்டில் விக்கெட்டுகளை எடுத்தால் மட்டுமே உங்களால் வெற்றி பெற முடியும். முதல் ஆறு ஓவரில் எதிரணியை நெருக்கடிக்கு ஆளாக்கும் வகையில் விளையாட வேண்டும். இதனால் தான் நாங்கள் வெற்றி பெற்றோம் என்று விராட் கோலி கூறினார்.