நியூசிலாந்தில் காட்டுப்பூனைகளை குழந்தைகள் வேட்டையாடி கொல்லும் போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கத்திய ஐரோப்பிய நாடுகளில் ஒன்றாக நியுசிலாந்து உள்ளது. இங்கு காட்டுப்பூனைகள் அதிக அளவில் உள்ளன. காட்டுப்பூனைகளின் எண்ணிக்கை அதிகரிப்பால் உள்நாட்டு பறவைகள், பல்லிகள், வௌவால்கள், எலிகள் மற்றும் பூச்சிகளின் இருத்தலுக்கு அபாயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதை தொடர்ந்தே நாட்டின் உயிரியல் பாதுகாப்பை உறுதி செய்யப்படுவதற்காக காட்டுப்பூனை வேட்டை என்ற வினோத போட்டி நடத்தப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் காட்டுப்பூனைகளை வேட்டியாடி கொல்லும் வினோத போட்டிகள் நடத்தப்படுகிறது. அந்தவகையில் இந்த ஆண்டும் காட்டுப் பூனை வேட்டை போட்டி அறிவிக்கப்பட்டது. ஆனால் அதில் தான் சிக்கல் எழுந்துள்ளது.
இது வரை வயது வந்தோர் மட்டுமே வேட்டைகளில் ஈடுபட்ட நிலையில், தற்போது அந்த விதி தளர்த்தப்பட்டு 14 வயது நிரம்பியவர்கள் மற்றும் அதற்கு கீழ் உள்ள குழந்தைகளும் இந்த காட்டுப்பூனை வேட்டை போட்டியில் கலந்து கொள்ளலாம். அதிக அளவிலான காட்டுப்பூனைகளை கொல்பவர்களுக்கு இந்திய மதிப்பில் 12 ஆயிரத்து 735 ரூபார் பரிசாக வழங்கப்படும் என போட்டி நடத்துபவர்கள் அறிவித்தது தற்போது கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
காட்டுப்பூனைகள வேட்டையாடி கொல்பவர்களுக்கு முதல் பரிசு வழங்கப்படும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த போட்டியில் கலந்து கொள்ளலாம் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர். இதை தொடர்ந்து குழந்தைகளுக்கு வன்முறையை விதைக்கும் இத்தகைய நிகழ்வுகளை தடுக்க வேண்டும் என குழந்தைகள் நல ஆர்வலர்கள், விலங்குகள் நல ஆர்வலர்கள் கடுமையான போராட்டத்தை முன்னெடுத்தனர். அதைத் தொடர்ந்து குழந்தைகளை இந்த போட்டியில் இணைத்ததை நிகழ்ச்சி ஏற்பட்டாளர்கள் திரும்ப பெற்றுள்ளனர்.
இதேபோல் காட்டு பன்றிகள் மற்றும் மான்களை வேட்டையாடுவதற்கான மற்ற பிரிவுகளுடன் இந்த போட்டி நடத்தப்படுகிறது. இது நியுசிலாந்தின் தெற்கு தீவுப் பகுதியில் உள்ள ரோதர்ஹாம் பள்ளியால் நிதி திரட்டும் வகையில் நடத்தப்படுகிறது என்பது குறிப்பிடதக்கது.