Saturday, September 23, 2023
Homeநியூஸ்‘திலக் வர்மா அணியில் இடம்பெறுவது சூர்யகுமாருக்கு நெருக்கடியை தரும்’ – மேத்யூ ஹேடன் கருத்து

‘திலக் வர்மா அணியில் இடம்பெறுவது சூர்யகுமாருக்கு நெருக்கடியை தரும்’ – மேத்யூ ஹேடன் கருத்து

உலகக்கோப்பை தொடரை மனதில் கொண்டு திலக் வர்மாவை தேர்வுக்குழுவினர் வாய்ப்பு அளித்துள்ளனர் என்று கருதுகிறேன்.

ஆசிய கோப்பை தொடரில் பேட்ஸ்மேன் திலக் வர்மா அணியில் இடம்பெற்றுள்ள நிலையில், அவரது சிறப்பான ஆட்டம் மற்றொரு பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவுக்கு நெருக்கடியை கொடுக்கும் என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் மேத்யூ ஹேடன் கூறியுள்ளார். இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக ஆசிய கிரிக்கெட் தொடர் விளையாடவுள்ளது.

ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ இன்று அறிவித்தது. நீண்ட நாட்களாக ஓய்வில் இருந்த கே.எல்.ராகுல், ஷ்ரேயாஸ் அய்யர் உள்ளிட்ட வீரர்கள் அணியில் இடம்பெற்றுள்ளார்கள். ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஆகஸ்ட் 30 ஆம் தேதி தொடங்கவுள்ளது. இந்த தொடரில் மொத்தம் 13 ஆட்டங்கள் நடைபெறுகின்றன.

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், நேபாளம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய 6 அணிகள் இந்த தொடரில் மோதுகின்றன. லீக் சுற்றில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். இறுதிப் போட்டி செப்டம்பர் 17 ஆம் தேதி நடைபெறவுள்ளது. உலகக்கோப்பை தொடருக்கு இன்னும் ஒன்றரை மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், ஆசிய கோப்பை தொடர் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

இந்த தொடரில் வெஸ்ட் இண்டீஸிற்கு எதிரான மேட்ச்சுகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியின் திலக் வர்மாவுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் மேத்யூ ஹேடன் கூறியதாவது-

உலகக்கோப்பை தொடரை மனதில் கொண்டு திலக் வர்மாவை தேர்வுக்குழுவினர் வாய்ப்பு அளித்துள்ளனர் என்று கருதுகிறேன். மிடில் ஆர்டர் வரிசையில் இந்திய அணி கடந்த சில ஆட்டங்களாக திணறி வருவதை பார்க்கலாம். இந்த பலவீனத்தை சரி செய்வதற்கு தேர்வுக்குழுவினர் முயன்றுள்ளனர். தற்போது திலக் வர்மா மிடில் ஆர்டரில் விளையாடுவார் என்பதால் ரன் குவிக்க வேண்டும் என்ற நெருக்கடி சூர்யகுமாருக்கு ஏற்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular