இந்தியாவில் தங்கத்தின் தேவை குறைந்துள்ளதாக உலக தங்க கவுன்சில் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
தங்க நுகர்வில் உலகிலேயே இரண்டாவது பெரிய சந்தையாக இந்தியா உள்ளது. இதனிடையே உலக தங்க கவுன்சில் (World Gold Council) வெளியிட்ட சமீபத்திய அறிக்கையில், ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில் இந்தியாவில் தங்கத்தின் தேவை குறைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
WGC அறிக்கையின்படி 2023 ஏப்ரல்-ஜூன் காலாண்டில் இந்தியாவில் தங்கத்தின் தேவை 7 சதவீதம் குறைந்து 158.1 டன்னாக இருந்தது. இந்தியாவின் தங்கத்தின் தேவை கடந்த ஆண்டு 170.7 டன்-ஆக இருந்த நிலையில், இந்த ஆண்டின் Q2-ல் 158.1 டன்னாக குறைந்துள்ளது. இருப்பினும், 2023-ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் தங்கம் இறக்குமதி 16 சதவிகிதம் உயர்ந்து 209 டன்னாக இருந்தது.

நாட்டில் தங்கத்தின் தேவை குறைந்ததற்கு முக்கிய காரணம், விலைவாசி உயர்வே என நிபுணர்கள் கூறுகின்றனர். ஜூன் காலாண்டில் தங்கம் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டியது. இதன் காரணமாக இந்த ஆண்டு இந்தியாவில் தங்கம் வாங்குவது மிகக் குறைவாக இருக்கும் என்று WGC கூறுகிறது.
இந்தியாவில் தங்கத்தின் தேவை குறைந்ததற்கான சில முக்கிய காரணங்கள் இங்கே:
1. உள்நாட்டு சந்தையில் அதிக விலை பதிவானது
You May Like