கதிர், குறிஞ்சிபூக்கள் பத்திரிக்கை ரொம்ப பிரபலமானதுதானே? ஆமாம் சார், நாம இந்த பத்திரிக்கை ஆபிஸ்ல போய் விசாரிச்சா விபரம் கிடைச்சுரும் சார். அதுசரி, இந்த பொண்ணுதான்னு எப்படி கண்டுபிடிச்ச கதிர்? சார், இந்த பொண்ணை எங்கயோ பார்த்த மாதிரி இருந்தது. அப்போ யோசிச்சுகிட்டடே இருந்தப்போதான் இந்த பொண்ணு, நான் வழக்கமா போற சக்தி ஆசிரமத்திற்கு போன வாரம் வந்தது நியாபகம் வந்தது. அந்த நிர்வாகி சாரதா மேடம், அவகிட்ட பேசிட்டு இருந்ததை ஏதேட்சயா பார்த்தேன். அவங்க இந்த பொண்ணுகிட்ட, நீ குறிஞ்சிபூக்கள் ரிப்போட்டரா இருக்குறதாலதான் உங்க பத்திரிக்கை மூலமா இந்த ஆசிரமத்திற்கு நெறைய உதவிகள் கிடைக்குது. ரொம்ப தேங்க்ஸ்மானு சொல்லிட்டு இருந்தாங்க. அது இப்போ நியாபகம் வந்துச்சு. உடனே கூகுள்ல குறிஞ்சிபூக்கள் ரிப்போட்டர்னு டைப் பண்ணுனேன். அந்த பொண்ணு பேரு எனக்கு தெரியல. ஆனா முகம் தெரிஞ்சுதால கண்டுபிடிச்சிட்டேன். சூப்பர் கதிர். நல்ல வேலை செஞ்ச. ஓகே நாம இப்ப முதல்ல அந்த பத்திரிக்கை ஆபிஸ்கு போய்ட்டு, அப்புறமா அந்த ஆசிரமத்துக்கு போகலாம் என்று கூறவே, சரி என்று கூறினான் கதிர். ஜீப் நேராக குறிஞ்சிபூக்கள் பத்திரிக்கை வாசலில் சென்று நின்றது. அங்கிருந்த வரவேற்பறைக்கு சென்று, இந்த பத்திரிக்கையின் ஆசிரியரை பார்க்க வேண்டும் என்று கூறவும், அப்பாயிண்ட்மென்ட் வைச்சுரிக்கீங்களா என அந்த பொண்ணு வினவவும், இல்லை ஆனா அவசரமாக பார்க்க வேண்டும் என்று கதிர் கூறவும், ஒரு நிமிஷம் வெயிட் பண்ணுங்க என்று கூறிவிட்டு அந்த பெண் பத்திரிக்கை ஆசிரியரை போனில் அழைத்து விபரம் கூறவும் அவர்களை வர சொல்லி பர்மிஷன் கொடுக்கவும் ஆசிரியரின் அறைக்கு வழியை காட்டினாள். அந்த பத்திரிக்கை ஆபிஸின் உட்புறதை பார்த்து திகைத்தனர் முத்துவேலும், கதிரும். என்ன கதிர்? இத பார்த்த பத்திரிக்கை ஆபிஸ் மாதிரியே இல்ல. ஏதோ பைவ் ஸ்டார் ஹோட்டல்குள்ள வந்த மாதிரி இருக்கு. ஆமா சார், இந்த ஆபிஸ் ஆடம்பரமாவும், அலங்காரமாவும் இருக்கு. இங்க ஏதோ தப்பு இருக்குற மாதிரி என்மனசு சந்தேகப்படுது சார். கிட்டத்தட்ட எனக்கும் அதேமாதிரிதான் தோணுது கதிர். சரி வா உள்ள போய் விசாரிப்போம். அந்த அறைக்கதவை திறந்துகொண்டு இன்ஸ்பெக்டர் முத்துவேலும், கிரைம் பிரன்ச் அதிகாரி கதிரும் நுழைந்தனர். வாங்க உட்காருங்க, என்ன விஷயமா என்ன பாக்க வந்திங்கனு நான் தெரிஞ்சுக்கலாமா? கண்டிப்பா உங்க ஆபிஸ்ல வேலை செய்யுற ஹரிணிய பத்தின தகவல்கள் வேணும். ஏன் சார், போன வாரம் தானே வாங்கிட்டு போனீங்க. அப்போ இன்னும் ஹரிணிய கண்டுபிடிக்கலியா? ஏன் அப்படியா கேக்குறீங்க? அப்போ நீங்க ஹரிணி காணாமப்போன விஷயத்தை பத்தி விசாரிக்க வரலையா? என்னது ஹரிணி காணாம போய்ட்டாளா? எப்போ? ஆமாங்க சார். ஒருவாரதுக்கு முன்னாடியே காணாம போய்ட்டா. பக்கத்துல போலீஸ் ஸ்டேஷன்ல கம்பளைண்ட் குடுத்துருக்கோம். ஒ அப்படியா, பட் ஐ ஆம் சாரி. ஹரிணி செத்துட்டா. வாட்? எப்போ என்று கண்ணில் அதிர்ச்சியை வைத்து கொண்டு வினாவினர் அந்த பத்திரிக்கை ஆசிரியர். பகுதி 5 ஆமா, அத பதித்தான் விசாரிக்க வந்திருக்கோம். கொஞ்சம் ஹரிணிய பத்தி சொல்றிங்களா? சார், ஹரிணி ஊர் ராஜதாணிக்கோட்டை. அவளுக்கு அம்மா, அப்பா கிடையாது. அக்கா மட்டும்தான். அவங்களும் கல்யாணம் பண்ணிட்டு போய்ட்டதா ஹரிணி என்கிட்டே ஒரு தடவை சொல்லிருக்காங்க. இப்போ அவங்க மட்டும், ராஜதானிக்கோட்டைல தனியா வீடு எடுத்து தங்கிருக்காங்க. அப்போ ஹரிணியும், அவங்க அக்காவும் மட்டும்தானா? இல்ல சார். ஹரிணிக்கு அம்மா-அப்பா இருந்தாங்க. இப்போதான் ஒரு வருசத்துக்கு முன்னாடி இறந்தாங்க. ரெண்டு பேரும் ஒண்ணாவேவா இறந்தாங்க? எப்படி? ஆமா, ஆனா அது இயற்கையான மரணம் இல்ல. சார், ஹரிணி கொஞ்சம் தைரியமான பொண்ணு. தப்பு எங்க நடந்தாலும் தைரியமா அவளோட எழுத்து மூலமா தட்டி கேப்பாங்க. அவங்க கேள்வி ஒவ்வொண்ணும், குற்றவாளிய சாட்டையடி அடிக்கிற மாதிரி இருக்கும். போனா வருஷம் ஒரு பெரிய அரசியல்வாதியோட அராஜக்கத்தை அழிக்குறதுக்காக, அவருக்கு எதிரான ஆதாரங்களை திரட்டிட்டு இருந்தாங்க. ஆதாரங்களை திரட்டி, அவருக்கு தண்டனை வாங்கி குடுக்கணுங்கிறது அவங்க நோக்கமா இருந்தது. அந்த அரசியல்வாதியும், அவங்களோட இந்த முயற்சிகளை முடக்க என்ன என்னமோ பண்ணி பாத்தாரு. ஆனா அதையும் மீறி, ஹரிணி எல்லா ஆதரங்களையும் சேகரிச்சுட்டாங்க. அத பத்தி என்கிட்டே பேசணும்னு சொன்னாங்க. நானும் அவங்களை ஆபிஸ்கு வர சொன்னேன். அவங்களும் வந்தாங்க. என்கிட்டே பேச ஆரம்பிக்கும்போதே அவங்களுக்கு போன் வந்தது. எடுத்து பேசுனவங்க, அங்க என்ன சொன்னாங்களோ இவங்க முகம் மாறி அழுதுட்டே கிளம்பி போனாங்க. நான் என்ன ஆச்சுன்னு கேட்டதுக்கு பதில் கூட சொல்லல. அதுக்கு அப்புறம் தான் தெரிஞ்சது அவங்க வீட்டுல வெடிகுண்டு வைச்சுருந்துருக்காங்க. அது வெடிச்சு அவங்க அம்மாவும், அப்பாவும் இறந்துட்டாங்க. ஹரிணி அக்கா கடைக்கு போனதால அவங்க தப்பிச்சுட்டாங்க. இவ்வளவு பெரிய விஷயம் நடந்துருக்கு. ஆனா எந்த நியூஸ்லயும் வரலையே? எப்படி சார் வரும்? அவங்க தான் கேஸை மாத்தி சிலிண்டர் வெடித்து விபத்துன்னு சொல்லிட்டாங்களே. ஹரிணியின் வீட்டுக்கு வெடிகுண்டு வைத்தவன், இந்த ஆபிஸ்ல வேலை பாக்குற எல்லாருக்கும் மிரட்டல் விட்டுட்டான். அதுல இங்க இருக்குற எல்லாருமே பயந்துட்டோம். அப்புறம்தான் ஹரிணிகிட்ட, இனிமே இந்த விஷத்தை விட்ருங்கமானு எல்லாரும் சொன்னோம். ஹரிணியும் சரினு சொல்லிட்டாங்க. அதுக்கு அப்புறம் எந்த பிரச்சனையும் இல்லாமதான் இருந்தது. போன வாரம் தான் தீடீருனு ஹரிணி காணாம போய்ட்டாங்க. சரி ஹரிணி அக்காவோட பேரு என்ன? அவங்க அட்ரஸ் இருக்கா? ஹரிணி அக்கா பேரு சினேகா. ஆனா அவங்க அட்ரஸ் தெரியாது சார். சரி, இங்க ஹரிணிக்கு பிரண்ட்ஸ் யாராச்சும் இருக்காங்களா? இல்லை சார். ஹரிணி எல்லாருகிட்டயும் ஜோவியலா பழகுவாங்க. ஆனா ரொம்ப க்ளோஸ் பிரண்ட்ஸ்னு யாரும் கிடையாது. ஓகே, ஹரிணி எதிர்த்த அந்த அரசியல்வாதி யாரு? எம். எல். ஏ துரைப்பாண்டியன் சார். நான்தான் சொன்னேன்னு வெளியே யாருகிட்டயும் சொல்லிறாதீங்க சார். சரி, ஹரிணி வீட்டு அட்ரஸ் குடுங்க. 3b, கொடிகுலதான் கோவில் தெரு, ராஜாதானிக்கோட்டை. இதுதான் அந்த பொண்ணோட அட்ரஸ் சார். ஓகே, அப்போ நாங்க கிளம்புறோம். எதாவது இன்பர்மேஷன் வேணும்னா அப்போ வரோம். சரிங்க சார் வாங்க. உங்களுக்கு ஹெல்ப் பண்ண நான் தயாரா இருக்கேன். கதிரும், முத்துவேலும் அந்த பத்திரிக்கை அலுவலகத்தை விட்டுட்டு வெளியேறியபோது எங்கிருந்தோ பறந்து வந்த தோட்டா ஒன்று, கதிரின் சட்டையை முத்தமிட்டு சென்றது. அதை தொடர்ந்து ஒரு கல்லால் சுற்றப்பட்ட காகிதம் ஒன்று, அவர்கள் இருவருக்கும் முன்னால் வந்து விழுந்தது. அதை எடுத்து படித்த முத்துவேல் அதிர்ந்து போய் கத்திரிடம் கொடுத்தார். கதிர் அந்த கடிதத்தை பார்வையிட்டான். அதில், “இந்த கேஸை இத்துடன் முடித்துக் கொள்ளுங்கள். இல்லையெனில் ரத்த மரணங்கள் மர்மமான முறையில் தொடரும் ” என்றிருந்தது. அந்த கடிதத்தை பார்த்த இருவரும் அதிர்ச்சி அடைந்தனர். யாராவது இருக்கிறார்களா? என்று சுற்றும் முற்றும் பார்த்தனர். ஆனால் கண்ணுக்கெட்டிய தூரம் வரை யாரும் தென்படவில்லை. நம்மை பயமுறுத்துவதற்காக இப்படி செய்திருப்பார்களோ? என்று கதிர் வினவ, இல்லை கதிர், இதை நாம் அலட்சியமாக எடுத்து கொள்ள கூடாது. எதிரி நம்மை ஒவ்வொரு நிமிடமும் உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கிறான். நாம் பாதுகாப்பாக இருக்க வேண்டிய தருணம் இது. இதனை நாம் அலட்சியப்படுத்தினால் அது ஆபத்தில் முடியும். இனி இந்த கேஸை பொறுத்தவரை, ஒவ்வொரு அடியும் வேகமாகவும், அதே நேரத்தில் கவனமாகவும் எடுத்து வைக்க வேண்டும். ஓகே சார், இப்போ நம்ம அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன சார்? நேராக சக்தி ஆசிரமத்திற்கு போய், சாரதா அம்மாவை விசாரிக்க போறோம். கரெக்டா சார்? ஆமா கதிர். அங்க போனா நமக்கு எதாவது க்ளூ கிடைக்கலாம். இருவரும் சக்தி ஆசிரமம் கிளம்பினர். அதே நேரத்தில் டெல்லியில் உள்ள பெரிய அடுக்குமாடி கட்டிடத்தில் உள்ள ஏழாவது மாடியில், அந்த மீட்டிங் நடந்து கொண்டிருந்தது. அந்த கூட்டத்தில் இருந்த ஒருவன் எழுந்து, நண்பர்களே அந்த போலீஸ்காரர்களான அந்த இருவரும் ஹரிணி கேஸை அவ்வளவு சீக்கிரம் விட மாட்டார்கள் போலிருக்கிறது. இதை மேலிடத்தில் எப்படி கூறுவது தெரியவில்லை என்று, அந்த மீட்டிங்கை அரேன்ஞ் செய்தவனிடம் புலம்பி கொண்டிருந்தான். நானே அத நெனைச்சுதான் பயந்து போய் கிடக்குறேன். இதுல நீ வேற பயமுறுத்தாத, சும்மா கிடய்யா! திடீரென்று அந்த இடமே கப்சிப் என்றனது. இவ்வளவு நேரம் அவர்கள் பேசி கொண்டிருந்த மேலிடமானது வந்து கொண்டிருந்தது. “மேலிடம் வந்து விட்டார்கள் ” என்று தங்களுக்குள் கிசுகிசுத்த அந்த கூட்டத்தின் முன்னால் வந்து, கைகளை உயர்த்தி, “போதும், உங்க பேச்சை நிறுத்துங்க ” என்ற குரலில் அந்த இடமே அதிர்ந்தது. சீய், வெக்கமா இல்ல உங்களுக்கு? ஒரு ரெண்டு போலீஸ்காரர்களை அடக்க துப்பில்லை. பெரிசா இங்க மீட்டிங் போட்டு என்னத்தைய கிழிக்க போறீங்க. ஒழுங்கா அந்த போலீஸ்காரர்களை அடக்க பாருங்க. நாம பண்ணுற சம்பவங்கள், சம்பவங்களா மட்டும்தான் இருக்கனும். அதை எந்த நாயும் கிளறி பார்க்க கூடாது. மீறி பார்த்தா, அவங்க பொணமாதான் நடுரோட்டுல கிடக்கணும். அப்படியா அவங்க பொணமா ஆகலைனா, நீங்க பொணமா ஆகிடுவீங்க, ஜாக்கிரதை! என்று எச்சரித்துவிட்டு கிளம்பியது அந்த மேலிடம். அடைமழை பெய்து ஓய்ந்ததுபோல இருந்தது. அங்கிருந்த அனைவரும் ஒருவரையொருவர் பீதியுடன் பார்த்துக் கொண்டனர். இங்கோ கதிரும் -முத்துவேலும் அந்த சக்தி ஆசிரமத்தை வந்தடைந்தனர். இங்கதான் நீ அந்த ஹரிணிய பாத்தியா கதிர்? ஆமாங்க சார். இந்த ஆசிரமத்தோட நிர்வாகி சக்தி மேடத்தை விசாரித்தால் அனைத்மே தெரிந்துவிடும். இவர்கள் இருவரும் வருவதனை பார்த்த அந்த ஆசிரமத்தின் பணியாள் ஓடிவந்து, “ஐயா, நீங்க யாரை பாக்கணும்”? என்று வினவினான். இந்த ஆசிரமத்தோட நிர்வாகி சக்தி மேடத்தை பார்க்கணும். ஓ அப்படியா! ஏய் பொன்னாத்தா, இவங்களை சக்தி மேடத்துகிட்ட கூட்டிட்டு போ, என்று, இன்னொரு பெண்ணிடம் கூறினான். அவளும் அவர்களிடம், வாங்க சார்! என்று அழைத்து சக்தி இருந்த அறையை காட்டினாள். மேடம் இவங்க உங்கள பார்க்க வந்துருக்காங்க! அப்படியா, சரி நான் பாத்துக்கிறேன். நீ உன் வேலைய பாரு. சரிங்கம்மா, என்றவாரே அவள் கிளம்பினாள். வாங்க சார், நீங்க யாரு? உங்களுக்கு என்ன வேணும்? எதுக்காக என்ன பார்க்க வந்துருக்கீங்கன்னு தெரிஞ்சுக்கலாமா? கண்டிப்பா மேடம், நான் இன்ஸ்பெக்டர் முத்துவேல், இவர் கிரைம் பிராஞ்ச் அதிகாரி கதிர். ஹரிணிய உங்களுக்கு தெரியுமா? ஹரிணியா? நீங்க கேட்கிறது குறிஞ்சிபூக்கள் ரிப்போட்டார் ஹரிணியவா? ஏன் சார், ஹரிணிக்கு ஏதாவது பிரச்சனையா? யெஸ், ஹரிணி ஒரு வாரத்துக்கு முன்னாடி கடத்தப்பட்டு, நேற்று கொலை செய்யப்படிருக்கா! என்னது ஹரிணிய கொலை பண்ணிட்டாங்களா? நல்ல பொண்ணு சார் அவ யாரு அவளை இப்படி பண்ணுனது? அதைக் கண்டுபிடிக்கத்தான் இன்வெஸ்டிகேட் பண்ணிட்டு இருக்கோம். உங்களுக்கு ஹரிணி எப்படி பழக்கம்? அவ பேமிலி பேக்ரௌண்ட் என்ன? அவ அட்ரஸ் கொஞ்சம் சொல்றிங்களா? கண்டிப்பா சார். நான் இந்த ஆசிரமத்தோட நிர்வாகி மட்டுமில்ல. என்கிட்டே மன உழைச்சல்ல வரவங்களுக்கு கவுன்சிலிங் கொடுக்கவும் செய்வேன். அப்படி ஒரு கவுன்சிலுங்குக்கு அவ பிரண்ட் கூட வந்திருந்தா ஹரிணி. அப்போதான் பழக்கம். நான் ஆசிரமம் வைச்சு நடத்துறத கேள்விப்பட்டு அடிக்கடி இங்க வருவா. அவளோட பத்திரிகை மூலமா எங்க ஆசிரமத்தை விளம்பரப்படுத்தி, நன்கொடையும் வாங்கி தந்தா. பின்னர் ஒரு அட்ரஸை பேப்பரில் எழுதியவர், அதை முத்து வேலிடம் குடுத்தவர் இதுதான் அவ அட்ரஸ், என்றாள். அதை வாங்கி பார்த்த முத்துவேல் நன்றி மேடம், அப்போ நாங்க வரோம் என்றப்படியே இருவரும் கிளம்பினர். வெளியே வந்த முத்துவேலிடம், என்ன சார் நமக்கு அந்த பத்திரிகை ஆபிஸ்ல கிடைச்ச அட்ரசும் இதுவும் ஒன்றா? என்று கதிர் வினவ, ஆமா கதிர், எனக்கென்னமோ இந்த கேஸ் இதோட முடியுற மாதிரி தெரியல, இது நமக்கு மிக பெரிய ஒரு சவாலா இருக்க போகுது. அதெல்லாம் கண்டுபிடிச்சிடலாம் சார், என்று கதிர் சொல்லி கொண்டிருக்கும் போதே, முத்துவேலின் செல்போன் அலறியது. அதை எடுத்து காதுக்கு கொடுத்தவர், அந்த பக்கம் கூறிய செய்தியை கேட்டு முகம் மாறினார். என்ன ஆச்சு சார்? என்று கேட்ட கத்திரிடம், ” கொடைரோடு காட்டுப்பாலத்துக்கு அடியில் ஒரு டெட்பாடி கிடைக்குதம் ” என்று முத்துவேல் கூறவும் சிலையானான் கதிர். உடனடியாக இருவரும் அந்த கொடைரோடு காட்டுப் பாலத்திற்கு சென்றனர். அங்கு அழுகிய நிலையில் ஒரு ஆண்சடலம் கிடந்தது. இவர்கள் இருவரும் செல்வதற்கு முன்பே அங்கு, அந்த எரியா இன்ஸ்பெக்டரும் -சக போலீஸ்காரர்களும், பிரஸ் மீடியாக்களும் தடவியல் நிபுணர்களும் அந்த இடத்தை ஆக்ரமித்திருந்தனர். தடவியல் நிபுணர்கள் தங்களுக்கு எதாவது துப்பு கிடைக்குமா என்று இன்ச் பை இன்ச்சாக அந்த இடத்தை ஆராய்ந்து கொண்டிருந்தனர். அப்போது அந்த சடலத்திற்கு கொஞ்சம் தள்ளி ஏதோ வெள்ளையாக பேப்பர் போன்று தென்படவே, அதை நெருங்கிய கதிர், பக்கத்தில் சென்று பார்த்தபோதுதான் தெரிந்தது, அது ஒரு கடையின் பில் என்று. அதை எடுத்து தன் சட்டைப்பயில் பத்திரப்படுத்தி கொண்டான் கதிர். இறந்துபோனவன் யார் என்று தெரிந்ததா? என்று அங்கிருந்தவர்களிடம் விசாரித்து கொண்டிருந்தார் முத்துவேல். அதற்கு அங்கிருந்த இன்ஸ்பெக்டர், இல்லை சார். முகத்தை முழுமையாக சிதைச்சுருக்காங்க. ஆளு யாருனு கண்டுபிடிக்க கூடாதுனே இத பண்ணிருக்காங்க சார். பரவாயில்ல, கண்டிப்பா எதாவது ஒரு க்ளூ கிடைக்கும். டோன்ட் மிஸ் இட்! அந்த பாடிய தரோவா செக் பண்ணுங்க. தடவியல் நிபுணர்கள் பாடியை செக் செய்து விட்டு, “சார் இங்க பாருங்க என்றவாரே அந்த டெட்பாடியின் வலது கையை காமித்தனர். அதில் ஒரு டாட்டூ வரைந்திருந்தது. இந்த க்ளூ போதுமே என்று கூறிய முத்துவேல், கதிரிடம் திரும்பி, கதிர், உன் கைக்கு ஒரு பில் கிடைச்சதுல, அது எந்த கடையோட பில்? வெற்றிவேல் எண்டர்ப்ரைஸ் பில் சார் அது. ஓகே, பாடிய போஸ்ட்மாட்டம் பண்ண அனுப்பிருங்க. நாம அந்த வெற்றிவேல் எண்டர்பிரைஸ் -க்கு போகலாம். சார், பாடியோட வலது கையில செம்பருத்தி பூவை, டாட்டூவா வரைஞ்சுருக்கான். நாம இத டீவில டெலிகாஸ்ட் பண்ணுனா, இவன் சம்பந்தபட்டவங்களுக்கு அடையாளம் தெரிய வாய்ப்பிருக்கு சார். கரெக்ட் கதிர், உடனே எல்லா டீவி, பத்திரிகையிலும் இதை பத்தின டீடெயில்ஸ் குடுத்துருங்க. இன்னிக்கு ஈவினிங்குள்ள அந்த டெட்பாடிய பத்தின டீடெயில்ஸ் எனக்கு வந்தாகனும். ஓகே சார், மீடியாக்கு இன்பர்மேஷன் குடுத்துடுறேன். சரி வாங்க கதிர், இப்போ அந்தக் வெற்றிவேல் எண்டர்ப்ரைஸ்க்கு கிளம்பலாம். மீடியாக்கு இன்பர்மேஷன் கொடுத்துவிட்டு, இருவரும் ஜீப்பை எடுத்துக் கொண்டு கிளம்பினர். செல்லும் வழியில் கதிர் முத்துவேலிடம், சார் எல்லாம் ஓகே ஆனா ஒரே ஒரு விஷயம் தான் இடிக்குது. உங்ககிட்ட நான் ஒன்னு கேக்கலாமா? என்ன கதிர் தயங்காமல் கேளுங்க? சார் ஹரிணியோடதுனு நெனைச்ச அந்த டெட்பாடி ஹரிணியோடது இல்ல, அது ஒரு திருநங்கையோடது. அப்போ ஹரிணி செத்துட்டாளா? இல்லையானு நமக்கு தெரியாது. அப்புறம் ஏன் நீங்க, நாம விசாரிக்க போற எல்லாருகிட்டயும் ஏன் ஹரிணிய கொலை செஞ்சுட்டாங்கனே சொல்றிங்க? இதுதானா, இத நீ முன்னமே கேட்பேன்னு நெனச்சேன் கதிர். என்ன பண்றது சில உண்மையை வெளியே கொண்டு வரதுக்காக இப்படிலாம் பொய் சொல்ல வேண்டியதா இருக்கு. அது ஒண்ணுமில்ல கதிர், அந்த திருநங்கைக்கு ஹரிணியோட பேஸ்மாஸ்க் போட்டுவிட்டவங்க, அந்த பொண்ணு நாம செத்துட்டானு நினைக்கணும் இப்படி பண்ணிருக்காங்க. ஹரிணி எதாவது ஒரு வகையில அவங்களுக்கு தேவை பட்டிருக்கலாம். அதுக்காக அவளை கடத்தி வைச்சுருக்கலாம். ஆனா ஹரிணி கடத்தப்பட்தானு தெரிஞ்சா போலீஸ் சும்மா இருக்குமா? எப்படியாவது அவளை கண்டுபிடிக்க முயற்சி பண்ணும். அந்த முயற்சியை தடுக்கணும்னுகிறதுதான் ஹரிணிய கடத்துனவங்களோட எண்ணம். அதனாலதான் நானும் அவங்க வழியிலேயே போக ட்ரை பண்றேன். நாம இப்படி இன்வெஸ்டிகேட் பண்ணும்போது எதிராளி நாம ஹரிணி விஷயத்தை நம்பிட்டோம்னு அவங்க நெனைக்கும்போது, அவங்களோட அடுத்த ஆக்ட்டிவிட்டில கண்டிப்பா அவங்களையும் அறியாம மிஸ்டேக் பண்ணுவான். அது நமக்கு கொலையாளியை நெருங்க ஒரு வாய்ப்பா இருக்கும். சூப்பர் சார், என்று கதிர் சொன்ன அதே நேரம் அவர்கள் வெற்றிவேல் எண்டர்ப்ரைஸ்-க்கு வந்திருந்தனர். அந்த கடையின் முதலாளியிடம் விசாரித்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஏனெனில் அந்தக் கடைக்காரர் “ஒரு நாளைக்கு ஆயிரம் பேரு வருவாங்க சார், எல்லாருக்கும் பில் தான் தரோம். அதுக்குன்னு எல்லாரையும் நியாபகம் வைச்சுக்க முடியுமா சார்?” அது மட்டுமல்ல இங்க சிசிடிவி கேமராவும் 3 நாளா ஒர்க் ஆகல. நான் எப்படி சார் உங்களுக்கு இன்பர்மேஷன் கொடுக்க முடியும்? என்று எதிர்கேள்வி கேட்கவும், ஏமாற்றதுடன் திரும்பினர் இருவரும். பின்னர் போலீஸ் ஸ்டேஷன் சென்ற இருவருக்கும் ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. ஏனெனில் அங்கு ஹரிணி யாருக்கு எதிராக ஆதரங்களை திராட்டினாளோ, அந்த எம். எல். ஏய் துரைப்பாண்டியன் போலீஸ் ஸ்டேஷனில் இவர்களுக்காக காத்துக் கொண்டிருந்தார். இவர்களை பார்த்தவுடன் வேகமாக எழுந்துவந்து, சார் இன்னிக்கு நீங்க ஒரு டெட்பாடிய கண்டுபிடிச்சீங்களே அது என் மகனோடதுதான் சார், என்று அழுது கொன்டே கூறினார். அந்த டெட்பாடி துரைப்பாண்டியன் மகன் என்றால் அப்போ அவனைக் கொன்றது யார்? நடக்கும் எல்லா பிரச்சனைக்கும் காரணம் எம். எல். ஏ துரைப்பாண்டியன் என்று நாம் நினைத்தது தவறோ? முதலில் இந்த பிரச்சனையின் ஆணிவேரை கண்டுபிடிக்க வேண்டும். துரைப்பாண்டியனிடம் பேசி அவரை அனுப்பிவிட்டு கதிரை அழைத்த முத்துவேல், “கதிர் இப்போது நாம் உடனே ஜி. ஹெச் கிளம்ப வேண்டும். நீ உடனே டாக்டர்க்கு போன் பண்ணி நாம அனுப்புன அந்த திருநங்கை, அப்புறம் இன்னிக்கு காலைல அனுப்புன பாடி ரெண்டுக்கும் போஸ்ட்மாட்டம் ரிப்போர்ட் ரெடியான்னு கேளு “. ஓகே சார், என்றவன் உடனே அந்த டாக்டரிடம் பேசியவன், முத்துவேலிடம் திரும்பி, சார் ரிப்போர்ட் ரெடியா இருக்காம். அது மட்டுமில்ல, நம்மகிட்ட எதோ முக்கியமான விஷயம் சொல்லணுமாம், உடனே ஜி. ஹெச் வர சொல்றாரு டாக்டர் வர்மா. ஓகே கதிர் கிளம்பு போகலாம். இருவரும் ஜீப்பை எடுத்துக்கொண்டு ஜி. ஹெச் கிளம்பினர். அங்கு இவர்களுக்காக காத்து கொண்டிருந்தார் டாக்டர் வர்மா. ஜீப்பை நிறுத்திவிட்டு உள்ளே வந்த இருவரையும் வரவேற்ற டாக்டர் வர்மா, அவர்களை தன்னுடைய அறைக்கு அழைத்து சென்றார். தொண்டையை செருமிகொண்டு பேச ஆரமித்தவர், நான் இப்போ சொல்ல போகிற விஷயம் உங்களுக்கு ரொம்பவே அதிர்ச்சியா இருக்கும் மிஸ்டர் முத்துவேல். வாங்க என் கூட என்று அவர்களை பிணவறைக்கு அழைத்து சென்றார் வர்மா. காலையில் அவர்கள் கண்டெடுத்த டெட்பாடியிடம் அழைத்து சென்றவர், கிடத்தி வைக்கப்பட்ட பாடியை காண்பித்தவர், இந்த பாடில உங்களுக்கு எதாவது வித்தியாசம் தெரியுதா? என்று கேட்கவும் இல்லை என தலையசைத்தனர் இருவரும். அங்கிருந்த வார்டு பாய் இருவரை அழைத்த வர்மா, அந்த பாடியை திருப்பி போடுமாறு கூறினார். பின்னர் அவர்களிடம், இப்போது எதாவது வித்தியாசம் தெரிகிறதா என்று கேட்டார் டாக்டர் வர்மா. அந்த பாடியை பார்த்துக் கொண்டிருந்த கதிர், சட்டென ஓரிடத்தில் பார்வையை நிலைகுத்தி நிறுத்தினான். “டாக்டர் அந்த பாடியின் கழுத்து பகுதியில் ஏதோ தையல் மாதிரி போடப்பட்டுள்ளது”. கரெக்ட் கதிர், இது எதற்கான தையல் தெரியுமா? உடம்பில் இருக்கும் மொத்த தோலையும் உரித்து எடுத்துவிட்டு, செயற்கையான பார்மலீன் மூலம் பதப்படுத்தப்பட்ட தோலை ஒரு நுண்ணிய லேசர் பசை மூலம் இந்த உடம்பில் ஒட்ட வைத்துள்ளனர். ஆனால் கழுத்துப்பகுதியில் ஒட்டும்போது முடியுடன் தோல் ஒட்டாமல் போயிருக்கும். அதற்காகத்தான் இந்த தையலை தைத்துள்ளனர். ஓ மை காட்! எதற்காக டாக்டர் இப்படி செய்துள்ளனர்? மிஸ்டர் கதிர், இந்த தோல்கள் எல்லாம் பதப்படுத்தப்பட்டு முக தோல் மாற்று அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும். ஆனால் இந்த தோல் 25 வயதிற்கு உட்பட்ட நபர்களிடம் இருந்துதான் பெறப்படும். ஏனெனில் அந்த வயது மனிதர்களின் தோல்களில் உள்ள செல்கள் தான் புத்துணர்ச்சியுடன் இருக்கும். ஆனால் நம் நாட்டில் இதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதற்கு வெளிநாட்டில் நல்ல விலை. இங்கு ஏற்றுமதி செய்யப்படும் தோல்கள் அறுவை சிகிச்சையின் மூலமாக அங்கிருக்கும் பணக்காரக்களுக்கு தோல் மாற்று ஆபரேஷன் நடைபெறும். இதன் மூலம் அவர்கள் முகம் அழகாக மாறும். அது மட்டுமல்ல இந்த மனிதனின் உடலுறப்புகள் மொத்தமும் திருடப்பட்டுள்ளன. அதை மறைக்கவே அந்த செயற்கை தோலை வைத்து தைத்துள்ளனர். அப்படி என்றால் இது உடலுறப்பு திருடும் கும்பலா? கிடையாது, இது அதை காட்டிலும் மிகவும் மோசமான திருட்டு. இந்த டெட்பாடியில் இன்னொரு விஷயமும் உள்ளது. அது என்னவென்றால் இந்த பாடியின் ரத்தம் முழுவதும் திருடபட்டுள்ளது. இதற்கு காரணம் ஒன்றே ஒன்றுதான் காரணம். என்ன டாக்டர் அது? பாம்பே O பிரிவு ரத்தம்(bombay O group blood)