தேவையான பொருட்கள்
3முட்டை
உப்பு தேவையான அளவு
2 டேபிள் ஸ்பூன்எண்ணெய்
பூண்டு பொடியாக நறுக்கியது ஒரு டேபிள் ஸ்பூன்
100 கிராம்எலும்பில்லாத சிக்கன்
மிளகுத்தூள் ஒரு டீஸ்பூன்
3 டீஸ்பூன்சோயா சாஸ்
வினிகர் ஒரு டீஸ்பூன்
கேரட் ஒன்று
குடைமிளகாய் சிகப்பு மற்றும் மஞ்சள் ஒன்று
2 கப்வடித்த சாதம்
2 டேபிள்ஸ்பூன்வெங்காயத்தாள்

செய்முறை
முதலில் scramble egg செய்ய ஒரு கடாயில் என்னை முட்டை உப்பு சேர்த்து ஒரு நிமிடம் நன்றாக கலக்கவும். Scramble egg தயார்
கடாயில் எண்ணெய் விட்டுபொடியாக நறுக்கிய சிக்கன் சேர்த்து வதக்கவும். இதனுடன் பொடியாக நறுக்கிய பூண்டை சேர்த்து நன்றாக 3 நிமிடம் வதக்கவும்.
சிக்கனுடன் மிளகுத்தூள் உப்பு சேர்த்து மூடி வைத்து 5 நிமிடம் வேக விடவும்
சிக்கன் வெந்து தண்ணீர் நன்றாக சுண்டியதும் அதனுடன் சோயா சாஸ் கேரட் குடைமிளகாய் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.
குடைமிளகாய் கேரட் வெந்ததும் வடித்த சாதம் சேர்த்து உப்பு மிளகுத்தூள் சோயா சாஸ் சேர்த்து நன்றாக கலக்கவும்
பின் scramble egg வெங்காயத்தாள் சேர்த்து நன்றாக கலக்கவும்.