தேவையானபொருள்
1/4கிலோ எலும்பில்ல சிக்கன் (13 கட்லெட் வரும்)
150கிராம் வேக வைத்த உருளைக்கிழங்கு
சிறிதுநறுக்கிய கொத்தமல்லி இலை
உப்பு
எண்ணெய் பொரிப்பதற்கு
வதக்க:
2நறுக்கிய வெங்காயம்
1டீஸ்பூன் எண்ணெய்
1டீஸ்பூன்மிளகாய் தூள்
1/2டீஸ்பூன் கரம் மசாலா
1/4டீஸ்பூன் மஞ்சாள் தூள்
உப்பு
செய்முறை
ஒரு கடாயில் கழுவிய சிக்கனை சேர்த்து அதனுள் சிறு மஞ்சள் தூள் உப்பு சேர்த்து 15 நிமிடம் மிதமான தீயில் வேக வைத்துக்கொள்ளவும் சிக்கன் வெந்த பிறகு எலும்பை நீக்கி பிச்சுப் போட்டு கொள்ளவும்
ஒரு கடாயில் சிறிது எண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும் பிறகு அதில் மிளகாய் தூள் கரம் மசாலா மஞ்சாள்தூள் உப்பு சேர்த்து மிதமான தீயில் 2 நிமிடம் வதக்கிக் கொள்ளவும்
ஒரு பாத்திரத்தில் வதக்கிய மசாலா பிச்சுபோட்ட சிக்கன் வேக வைத்த உருளைக்கிழங்கு
நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்… உப்பு சரி பார்த்து உப்பு தேவை எனில் சேர்த்துக் கொள்ளவும்
இப்போது பிசைந்த மாவில் சிறு உருண்டையாக எடுத்து படத்தில் காட்டியவாறு வடை தட்டுவது போல் தட்டி கொள்ளவும்.. தட்டி வைத்ததை முட்டையில் தோய்த்து
பிரெட் தூளில் புரட்டி எடுத்துக்கொள்ளவும்
30 நிமிடம் கழித்து கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் மிதமான மற்றும் குறைந்த தீயில் கட்லெட்டுகளை பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்

இப்போது சுவையான சிக்கன் கட்லெட் தயார்