Saturday, September 30, 2023
Homeதொழில்நுட்பம்இன்சூரன்ஸ் என்றால் என்ன? எப்படி காப்பீடு தொகையை பெறுவது?

இன்சூரன்ஸ் என்றால் என்ன? எப்படி காப்பீடு தொகையை பெறுவது?

    வாகன இன்சூரன்ஸ் என்பது நம் வாகனம் விபத்தில் சிக்கினாலோ அல்லது பழுதடைந்தாலோ காப்பீட்டு நிறுவனங்கள் நமக்கு அளிக்கும்

    நம்முடைய காரை காப்பீடு செய்வதென்பது கார் வைத்திருக்கும் அனைவரும் கட்டாயம் செய்யவேண்டிய ஒரு விஷயமாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் எப்போது என்ன நடக்கும் என்று யாருக்கும் தெரியாது. அதனால் முன்னெச்சரிக்கையாக காருக்கு காப்பீடு செய்துகொள்வது மிகவும் சிறந்தது.

    இந்த காப்பீடு செய்வதற்க்கென தற்போது பல தனியார் மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்கள் உள்ளன. அந்த நிறுவனங்களின் அலுவலர்களிடம் சென்று நம்முடைய காருக்கான காப்பீடை நாம் செய்யமுடியும். ஆனால் இதனை எப்படி நாம் இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் இருந்து மீண்டும் பெறுவது?. இதன் விவரம் குறித்து இந்த பதிவில் காணலாம்.

    1.தேவையான ஆவணம் சேகரிப்பு
    முதலில் கார் இன்சூரன்ஸ் பெற நமக்கு சில ஆவணங்கள் தேவை இந்த ஆவணங்கள் மூலம் நாம் நம்முடைய காருக்கான இன்சூரன்ஸ் பெற முடியும்.

    • இன்சூரன்ஸ் பாலிசி படிவம் (அசல் அல்லது நகல்).
    • காவல் நிலைய FIR படிவம்.
    • காப்பீட்டாளரின் ஓட்டுநர் உரிம மற்றும் விவரம்.
    • காரின் பதிவு படிவம்.
    • மருத்துவ செலவு மற்றும் விவரங்கள்(காயம் ஏற்பட்டிருந்தால்).
    • எல்லா செலவுகள் அசல் படிவங்கள்.
    • காரின் பழுது மற்றும் செலவு விவரங்கள்.

    2. இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு விபத்து குறித்து தெரியப்படுத்துதல்
    நம்முடைய காரின் விபத்து குறித்து நம்முடைய காரின் இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு முதலில் தெரியப்படுத்தவேண்டும். வாரம் 7 நாட்களும் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் இயங்குகின்றன அதனால் அவர்களை நாம் எப்போது வேண்டுமானாலும் தொடர்பு கொள்ளலாம்.
    இதனை நாம் உடனடியாக சொல்ல தவறினால் இன்சூரன்ஸ் பெறுவதில் சிக்கல் ஏற்படும். அதனால் முடிந்தளவு விரைவாக இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் கார் விபத்து குறித்து தெரியப்படுத்தவேண்டும்.

    முதலில் அருகில் உள்ள காவல் நிலையத்தில் FIR பதியவேண்டும். இந்த பதிவில் காரில் ஏற்பட்டுள்ள பழுது, கீறல்கள், நொக்குகள் ஆகியவற்றை தெளிவாக எழுதவேண்டும்.
    இதனுடன் விபத்தை நேரில் பார்த்தவர்களின் சாட்சியம், காரை ஓட்டியவர், விபத்து ஏற்பட்ட பகுதி போன்றவற்றை பதியவேண்டும்.

    4.புகைப்படம் மற்றும் சாட்சிகள்
    கார் விபத்தின் புகைப்படம் மற்றும் அதன் சாட்சிகளை காட்ட வேண்டும். இதில் காரில் எங்கெல்லாம் பழுது அல்லது நொறுங்கல்கள் ஏற்பட்டுள்ளனவோ அவற்றை எல்லாம் புகைப்படம் எடுத்து பதியவேண்டும்.
    மேலும் சாட்சிகளின் தொலைபேசி என் முதலியவற்றை அதனோடு இணைக்க வேண்டும்.

    5.ஆவணங்களை சமர்ப்பித்தல்
    இந்த மேற்கணட எல்லா ஆவணங்களும் கிடைத்தவுடன் நமது காரின் இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் ஆவணங்களை முறையாக சமர்ப்பிக்கவேண்டும்

    சமர்ப்பிக்கப்பட்ட பின்பு அந்த இன்சூரன்ஸ் நிறுவனத்தை சேர்ந்த ஊழயர் நேரில் வந்து காரை பார்வையிடுவார். மேலும் கொடுக்கப்பட்ட ஆவணங்களும் நேரடி விவரங்களும் சரியாக இருக்கிறதா என்பதை சரிபார்ப்பார். பின்னர் இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு தகவல் தெரிவிப்பர்.

    7.இன்சூரன்ஸ் கிடைப்பது
    இன்சூரன்ஸ் இரண்டு வகைகளாக கிடைக்கும் பழுது நீக்கிய பின் மற்றும் பழுது நீக்கும் முன். இந்த இரண்டில் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட சர்வீஸ் ஸ்டக்ஷன்களில் நாம் காரின் பழுதை நீக்கினால் நமக்கு இன்சூரன்ஸ் நிறுவனங்கள் சுலபமாக தொகையை நேரடியாக நம்முடைய சர்வீஸ் சென்டருக்கு செலுத்திவிடும்.
    இன்சூரன்ஸ் நிறுவனத்தின் அங்கீகரிக்கப்படாத சர்வீஸ் மையத்தில் சேவை செய்தால் முழு செலவையும் நாம் முதலில் ஏற்று பின்னர் நாம் செலவு செய்த தொகைகளை பில் வைத்து நம்முடைய இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் இருந்து தொகையை பெறலாம்.

    RELATED ARTICLES
    - Advertisment -

    Most Popular