Saturday, September 23, 2023
Homeசினிமாஅடுத்த சம்பவத்திற்கு தயாராகும் காந்தாரா 2..

அடுத்த சம்பவத்திற்கு தயாராகும் காந்தாரா 2..

காந்தாரா 2 படத்தின் கதை பின்னணி என்ன என்பது தெரியவந்துள்ளது.

Kantara 2: 16 கோடி செலவில் தயாராகி, 400 கோடி வசூல் சாதனை படைத்த காந்தாரா படத்தின் இரண்டாம் பாகம் உருவாகும் என்று பட குழு ஏற்கனவே அறிவித்திருந்தது. கன்னட நடிகர் ரிஷிப் ஷெட்டி கதாநாயகனாக நடித்து இயக்கி கடந்தாண்டு வெற்றி பெற்ற படம் தான்  காந்தாரா.

முதல் பாகத்தில் தரமான சம்பவத்தை செய்த ரிஷிப் ஷெட்டி அடுத்த சம்பவத்திற்கு தயாராகி இருக்கிறார். காந்தாரா சிறந்த படம் மற்றும் சிறந்த நடிகர் ஆகிய இரண்டு பிரிவுகளில் ஆஸ்கார் விருதுக்கும் பரிந்துரை செய்யப்பட்டது. தற்போது இதன் இரண்டாம் பாகத்திற்கான ஸ்கிரிப்ட் வேலைகளை ரிஷிப் ஷெட்டி  முடித்து விட்டார்.

முதல் பாகத்தை விட பிரம்மாண்டமான பட்ஜெட்டில் பான் இந்தியா படமாக  காந்தாரா 2  உருவாகப் போகிறது. மேலும் இந்த படத்தின் கதை மழைக்காலத்தில் நடப்பது போல் இருப்பதால் படப்பிடிப்பை இந்த ஆண்டு நவம்பரில் துவங்க  திட்டமிட்டுள்ளனர். படத்தின் பெரும்பாலான பகுதி மங்களூரில் படமாக்கப்பட உள்ளனர்

மேலும் காந்தாரா 2 என்பது நாட்டுப்புறக் கதைகளின் பின்னணியைப் பற்றிய  படமாகும். காந்தாராவின் முதல் பாகத்தில் இடம் பெற்ற கதையை அடிப்படையாகக் கொண்டே இரண்டாம் பாகத்தையும் தொடர போகின்றனர். மேலும் காந்தாரா உண்மையான காட்சி சினிமாக் களியாட்டம் என்றும் கூறப்படுகிறது.

முதல் பாகத்தில் 1800-களில் குறுநில ராஜா ஒருவர் பழங்குடியினருக்கு வனப்பகுதியை ஒட்டிய நிலத்தை தானமாக கொடுத்து, அதன்பின் அவர்களது சந்ததியர் பழங்குடியினரிடமிருந்து அந்த இடத்தை பறிப்பது போல் கதையை அமைத்திருப்பார்கள். ஆனால்  இரண்டாம் நாட்டுப்புறக் கதைகளின் பின்னணியை கொண்டதாக படத்தை உருவாக்க போகின்றனர்.

இந்த படத்தின் படப்பிடிப்பை விரைவாக முடித்து படத்தை 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில்  வெளியாகும்  எனக் கூறப்படுகிறது. மேலும் காந்தாரா முதல் பாகத்தில் படத்தில் காட்சிப்படுத்தப்பட்ட காலத்திற்கு முன் நடக்கும் கதையாக காந்தாரா 2 உருவாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular